பள்ளிபாளையத்தில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் ஆங்காங்கே பள்ளம் தோண்டபட்டு உள்ளதால் சாலை குறுகி காணப்படுகிறது. இதனால் அடிக்கடி அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலைய ரோட்டில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் தட்டுதடுமாறி செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாமதமாகும் மேம்பால பணிகளை விரைந்து முடிப்பார்களா?
-பாலா, பள்ளிபாளையம்.