நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவில் வெப்படை உள்ளது. சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் வாகனங்கள், திருச்செங்கோட்டில் இருந்து குமாரபாளையம் செல்லும் வாகனங்கள் சந்திக்கும் முக்கியமான சந்திப்பு ஆகும். இந்த பகுதியில் ஏராளமான உள்ளூர் வாசிகள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் ரவுண்டானா அமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பசுபதி, குமாரபாளையம்.