கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக தொட்டிபள்ளம் வரை ஒரு நாளைக்கு 2 முறை பஸ் இயக்கப்பட்டது. ஆனால் சமீபகாலமாக இந்த பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் 7 கி.மீ. தூரம் இரவில் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வெளியூர் செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இந்த பஸ் சேவையை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராம்குமார், ஆலப்பட்டி, கிருஷ்ணகிரி.