பஸ்சை இயக்க வேண்டும்

Update: 2023-10-01 09:03 GMT

பள்ளத்தில் இருந்து நாகர்கோவில், மேலகிருஷ்ணன்புதூர்-நாகர்கோவில், மணக்குடி-நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட 36, 36 ‘பி’ அரசு பஸ் மூலம் மேலசரக்கல்விளை, கீழ சரக்கல்விளை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ்கள் மேலசரக்கல்விளை, கீழ சரக்கல்விளை வழித்தடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்