ஒரே நேரத்தில் இயக்கப்படும் பஸ்கள்

Update: 2026-10-25 09:58 GMT

கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து கொளப்பள்ளி, அய்யன்கொல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் பெரும்பாலான பஸ்கள் ஒரே நேரத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் மற்ற நேரங்களில் பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்