குமரி மாவட்டத்தின் எல்லையில் காவல்கிணறு உள்ளது. ஆனால், பொற்றையடி, மயிலாடி, மருங்கூர், ராஜவூர் ஆகிய பகுதிகளில் இருந்து காவல்கிணறுக்கு செல்லும் பயணிகள் நேரடி பஸ்வசதி இல்லை. இதனால் அவர்கள் நாகர்கோவில் வந்து செல்லவே நிலை இருந்து வருகிறது. எனவே, பயணிகள் நலன்கருதி பொற்றையடி, மயிலாடி, மருங்கூர், ராஜவூர், தோவாளை என புதிய வழித்தடத்தில் பஸ்சை இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், மருங்கூர்.