கீழ்பென்னாத்தூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலம், கல்வித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசு ஆண்கள் பள்ளி ஆகியவைகள் உள்ளன. மேற்படி அலுவலகங்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தனியார் பஸ்கள் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர். ஆனால், அரசு பஸ்கள் நிற்பது இல்லை. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரங்க.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.