பவுர்ணமி அன்று வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் பஸ்களும் போளூர் உள்ளே வந்து செல்வதில்லை. மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் பஸ்கள் பைபாஸ் சாலையிலேயே சென்று விடுகின்றன. இதனால் போளூர் நகரிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்பவர்களும் வேலூர், ஆரணி, திருவண்ணாமலை பகுதியிலிருந்து போளூருக்கு வருபவர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். உடனடியாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போளூர் நகருக்குள் அனைத்துப் பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமச்சந்திரன், போளூர்.