போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-07-30 09:19 GMT

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தோட்டியோட்டில் இருந்து வில்லுக்குறிய வரை சாலையோர பகுதியை ஆக்கிரமித்து நடைபாதை கடைகள் அமைத்து வருகிறார்கள். இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் பெரிய வாகனங்கள் வரும் போது சாலையோரம் ஒதுங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அத்துடன் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், வில்லுக்குறி.

மேலும் செய்திகள்