விதி மீறும் ஷேர் ஆட்டோக்கள்

Update: 2022-07-26 14:46 GMT

நாகை - நாகூர் சாலையில் 100-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இவை முக்கிய வீதிகள், கல்லூரி, பள்ளி பகுதிகளில் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை முறையாக மதித்து இயக்கப்படுவதில்லை. இதன் காரணமாக அவ்வபோது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சாலையில் மற்ற ஷேர் ஆட்டோக்களுடன் போட்டிப்போட்டு செல்வதை எப்போதும் பார்க்கலாம். இதனால் ஷேர் ஆட்டோவில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் முறையாக சாலை விதிகளை மதிக்கவும், வேகக்கட்டுபாட்டுடன் இயக்கப்படவும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்