சரக்கு வாகனங்களில் பயணம்

Update: 2022-07-25 13:23 GMT

நாமக்கல் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது சர்வ சாதாரணமாகி விட்டது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றக்கூடாது என்பது போக்குவரத்து துறையின் சட்டமாக உள்ளது. ஆனால் இதை மீறி பல சரக்கு வாகன டிரைவர்கள் ஆட்களை ஏற்றி செல்கிறார்கள். அதுவும் சில வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்வதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராயப்பன், நாமக்கல்.

மேலும் செய்திகள்