பெங்களூரு பேலஸ்சாலையில் உள்ள மகாராணி கல்லூரி முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பஸ் நிறுத்தம் இருக்கும் பகுதியில் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் ஆகியும் அந்த பஸ் நிறுத்தம் முன்பு நடைபாதை கற்கள் பதிக்காமல் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அதில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதை கற்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.