நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி ஊராட்சி எல்லையில் மேட்டுப்பகுதியில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை அறப்புலீஸ்வரர் கோவிலுக்கு மலைவாழ் மக்கள், தம்மம்பட்டி, ஆத்தூர் பகுதியில் இருந்து பொது மக்கள் அதிகளவில் செல்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்ல முள்ளுக்குறிச்சி எல்லையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் தற்போது சேதமடைந்து உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.