நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் மீது பழைய பாலம் ஒன்றும், புதிய பாலம் ஒன்றும் உள்ளது. இந்த 2 பாலங்களின் ஓரங்களிலும் மணல் குவிந்து பாலம் முழுவதும் இருக்கிறது. இதனால் பாலத்தில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கும்போது மணல் சறுக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கவனித்து மணலை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரமேஷ், பள்ளிபாளையம், நாமக்கல்.