நாமக்கல்-திருச்சி சாலை பஸ் நிலையத்தில் இருந்து சின்னவேப்பநத்தம் வரை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாகராஜபுரம் பகுதியில் இப்பணி முடிவடைந்த நிலையில் சாலையின் நடுவே சிமெண்டு கற்களால் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.சாலையின் நடுவே தடுப்பு சுவர் இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அதில் மோதி விபத்தில் சிக்குகிறார்கள். இதுபோன்று அவ்வப்போது சிறு,சிறு விபத்துகள் நடந்தவண்ணம் உள்ளது. இதை தடுக்க தடுப்பு சுவருக்கு முன்பு சிக்னல் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், நாமக்கல்.