நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காந்திபுரம் மாதா கோவில் வரை உள்ள பிரதான சாலையின் இருபுறங்களிலும் கடைகள், குடியிருப்புகள் அதிகம் காணப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் பஸ், லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் அவ்வழியே வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜெயபால், சேந்தமங்கலம், நாமக்கல்.