நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மக்கள் ஆட்டோவில் ஆபத்தான பயணம் மேற்கொள்கினறனர். இதனால் சில வாரங்களுக்கு முன்பு இதுபோன்று ஆட்களை ஏற்றி சென்றதால் ராசிபுரம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 10-கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்கள். எனவே போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதி மக்களுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.
-சந்தோஷ், வெண்ணந்தூர், நாமக்கல்.