நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலைக்குச் செல்லும் கொண்டை ஊசி வளைவில் ஒரு ராட்சத பாறை சாலையின் குறுக்கே காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த பாறையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராமசுந்தரம், சோளக்காடு, நாமக்கல்.