புதுச்சத்திரம் வராத தனியார் பஸ்கள்

Update: 2022-11-27 13:16 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலான தனியார் பஸ்கள் புதுச்சத்திரம் ஊருக்குள் செல்லாமல் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று விடுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே தனியார் பஸ்கள் புதுச்சத்திரம் ஊருக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், புதுச்சத்திரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி