நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த பாலப்பட்டியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் கே. புதுப்பாளையம் உள்ளது, அங்குள்ள தம்பிகலை அய்யனார் கோவில் அருகில், அணியாபுரத்தில் இருந்து தோளுர் வழியாக வரும் சாலையும் ஒன்றாக இணைகிறது. அந்த பகுதியில் ஏராளமான கோழி பண்ணைகள் உள்ளதால் கனரக வாகனங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் கனரக வாகனங்கள் திரும்பும் அளவிற்கு சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசப்பன், கே.புதுப்பாளையம், நாமக்கல்.