நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மசாமி கோவில் உள்ளிட்டவை உள்ளன. இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.ஜி.ஆர். நினைவு சாலை வழியாக பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, நாமக்கல்.