நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பாச்சல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இருந்து நாமக்கல், ராசிபுரம் செல்ல சரியான பஸ் வசதி இல்லை. இதனால் இந்த கிராமத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே நகர பேருந்து ஊருக்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபி, பாச்சல், நாமக்கல்.