நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-16 13:47 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் திருவாரூர்-நாகை சாலையில் பொதுமக்கள் வசதிக்காக பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், பயணிகள் நிழலகம் வருவதற்கு வசதியாக நடைபாதையும் உள்ளது. இந்த நிலையில் பயணிகள் நிழலகம் அருகே உள்ள நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பஸ் ஏறுவதற்காக அங்கு வரும் மாணவ-மாணவிகள், முதியவர்கள், பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்