வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-07-15 16:24 GMT

கரூர் மாவட்டம் காணியாளம்பட்டியில் இருந்து லந்தக்கோட்டை செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு சென்று விட்டு வரும் மதுபிரியர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் கரூர்-மணப்பாறை சாலைக்கு வரும்போது வேகமாக செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே கரூர்-மணப்பாறை சாலையை சந்திக்கும் இடத்திற்கு முன்பாக லந்தக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்