கள்ளக்குறிச்சியில் சேலம் சாலை மற்றும் துருகம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சேலம் சாலை மற்றும் துருகம் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.