நாகை மாவட்டம் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் பேரூராட்சிக்குட்பட்ட குருவிப்பாடி பகுதி சாலை உள்ளது. ஆனைமங்கலம், கோகூர்,வடகரை பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் மேற்கண்ட சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குருவிப்பாடி பகுதி சாலையில் வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?