நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாலம் ரோட்டில் இருந்து திருச்செங்கோடு சாலை வழியாக ஆலம்பாளையம் வரைக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுமார் 20 தூண்கள் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பஸ் நிலைய ரோட்டில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற வேண்டி உள்ளதால் அங்கு போடப்பட்டிருந்த நிழற்கூடம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயிலில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அங்கு தற்காலிகமாக நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
-ராமர், பள்ளிபாளையம், நாமக்கல்.