போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

Update: 2026-09-13 19:05 GMT

ஆரணி புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் கனரக வாகனங்கள், கோழிகளை ஏற்றி வரும் லாரிகள் அவ்வபோது நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது. அதேபோல் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.

-குமரன், ஆரணி. 

மேலும் செய்திகள்