நாமக்கல்-சேலம் ரோட்டில் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தம் அருகே இரு சக்கர வகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இந்தநிலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பஸ்கள் வருவது தெரியாமல் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் சாலையை கடக்கும் போதும் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்களா?
-உதயகுமார், நாமக்கல்.