செயல்படாத சிக்னல் விளக்குகள்

Update: 2022-08-25 15:15 GMT

தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சில சிக்னல் விளக்குகள் செயல்படாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சிக்னல் விளக்குகளை சரிசெய்து செயல்பாட்டு கொண்டு வர வேண்டும்.

-முருகன், தர்மபுரி.

மேலும் செய்திகள்