வேலூர் கஸ்பா அப்பாதுரை செட்டி தெருவில் அமுதம் ரேஷன் கடை உள்ளது. அதன் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. ரேஷன் பொருட்களை வாங்க காத்திருப்போர் கழிவுநீர் கால்வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் மூடி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய், வேலூர்.