ஜோலார்பேட்டை ஆசிரியர் நகர் குடியிருப்பு அசோக் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் தூர்ந்து போய் உள்ளதால், மழைநீர் சரியாக ஓடாமல் தேங்கி உள்ளது. தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. கால்வாயில் தேங்கும் மழைநீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மலர், ஜோலார்பேட்டை.