தார் சாலை, பக்க கால்வாய் அமைத்துத்தர வேண்டும்

Update: 2024-11-03 13:10 GMT

திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூர் அண்ணாமலையார் நகர் (மேற்கு ) அரசு ஐ.டி.ஐ. அருகில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு தார் சாலை செல்கிறது. இந்தத் தார் சாலை வழியாகத் தான் திருமலை நகர், சர்வேயர் நகர், மகாலட்சுமி நகர், மருதமலை நகர், மகாகணபதி நகர், சுமங்கலி நகர், அன்னக்கிளி கொட்டாய், போக்குவரத்து நகர், தனலட்சுமி நகர், தருமராஜ் நகர் போன்ற இன்னும் பிற நகர்களுக்கும், பள்ளி பஸ்களும், அலுவலகம் மற்றும் கடைத்தெரு செல்லும் பொதுமக்களும் செல்ல வேண்டும். இந்தச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழைக் காலங்களில் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. மழைக்காலத்துக்கு முன்பாக ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலையோரம் பக்க கால்வாய் அமைக்க வேண்டும். மேலும் தார் சாலை அமைத்துத் தர வேண்டும்.

-ரமேஷ், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்