திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - சேவூர் பைபாஸ் சாலை எதிரே இ.பி.நகர் விரிவாக்க பகுதி அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் உள்ள குறுக்குத் தெருக்களில் சாலை அமைக்கப்படாமல், தெருவில் நடுவே சாக்கடை ஓடுகிறது. இதனால் தெருக்கள் கால்வாய் போன்று காட்சியளிப்பதுடன், பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத நிலை உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.