வாலாஜாவை அடுத்த வீ.சி.மோட்டூர் வார்டு எண்:3 தனலட்சுமிநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளின் முன்பு கழிவுநீர் குட்டைபோல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.குமார், வீ.சி.மோட்டூர்.