வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நான்குகம்பம் அருகில் கழிவுநீர் கால்வாய் அடைபட்டதால் சாலையில் வழிந்தோடுகிறது. அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாய் அடைப்பை சரி செய்து கழிவுநீரை வடிய வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சே. பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.