சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-02-22 15:55 GMT

கே.வி.குப்பம் தாலுகா கீழ்ஆலத்தூரில் இருந்து நாகல் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாயை தனியார் நிலத்துக்காரர் ஆக்கிரமித்துள்ளதால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் கழிவுநீர் தேங்குவதால் சாலை சேதம் அடைகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்வாய் ஆக்கிரமிப்பை மீட்டு கழிவுநீர் சீராக ஓட ஏற்பாடு செய்யுமா?

-பொதுமக்கள், கீழ்ஆலத்தூர். 

மேலும் செய்திகள்