ஆரணி காந்தி ரோட்டில் இருந்து சந்திரகுளம் தெருவிற்கு செல்லக்கூடிய பாதையில் லேசான மழை பெய்தால்கூட சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலநிலை உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் ஓடுவதை தடுக்க, கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணவேண்டும்.