பேரணாம்பட்டு ஒன்றியம் ஏரிக்குத்திமேடு கிராமம் முஸ்லிம்பூர் முதல் தெரு அபுபக்கர் தெரு சந்திப்பில் திறந்த நிலையில் குடிநீர் வால்வு உள்ளது. குடிநீர் இணைப்பில் கழிவுநீர் கலக்கும் அவலம் உள்ளது. அந்தப் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. கிராம மற்றும் மாவட்ட நிர்வாகம் அதை உடனே சீர் செய்ய வேண்டும்.
முஹமத்ஆஸிம், குடியாத்தம்