கழிவுநீர் தேங்கும் அவலம்

Update: 2022-08-07 12:31 GMT

ஆற்காடு விநாயகர் தெரு மற்றும் புதுத்தெரு ஆகிய தெருக்களுக்கு நடுவே விநாயகர் கோவில் உள்ளது. அந்தக் கோவிலின் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் மழைக்காலங்களில் மழைநீருடன் சேர்ந்த கழிவுநீர் கோவில் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கோவில் அருகே கழிவுநீர் தேங்குவதை சரி செய்ய வேண்டும்.

ராமு, ஆற்காடு

மேலும் செய்திகள்