ஆரணியை அடுத்த கல்லேரிப்பட்டு ஊராட்சி மன்றம் எதிரே அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் அருகில் தண்ணீர் தேங்கி பாசிப்படர்ந்து சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. இதில் கொசு உற்பத்தியாகி அங்கன்வாடி மையத்திற்குவரும் குழந்தைகளுக்கு நோய் பரவும் சூழ்நிலை இருப்பதால் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.