வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. அந்த கால்வாய் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் மூலம் மூடப்பட்டுள்ளது. சில இடங்களில் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் அதன்மீது நடந்து செல்பவர்கள் தவறி கால்வாய்க்குள் விழும் நிலை உள்ளது. எனவே அதை சரிசெய்ய வேண்டும்.