திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனி-ஆயிமகாமாயி கோவில் பிரதான சாலையில் உள்ள நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் குவளைகள் மற்றும் பாட்டில்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகும் நிலையும் ஏற்படலாம். எனவே கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.