சுகாதார சீர்கேடு

Update: 2026-10-11 07:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அண்ணா நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட மண் கழிவுகள் குடியிருப்புக்கு அருகே அகற்றப்படாமல் பல மாதங்களாக குவிந்து கிடக்கின்றன. சமீபத்தில் பெய்த மழையால் அங்கு செடி கொடிகள் வளர்ந்து புழு, பூச்சிகள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால், குவிந்து கிடக்கும் மண் கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்