அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைக்கு பின்புறம் செல்லும் கால்வாய் அருகே கருவேல மரங்களும், செடி, கொடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் வகுப்பறைகளுக்குள் நுழைவதுடன், துர்நாற்றமும் வீசுவதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயில்கின்றனர். எனவே பள்ளி வளாகத்தை ஆய்வு செய்து, செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.