அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மண் மற்றும் குப்பைகள் தேங்கி கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் பெருகி குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாயை தூர்வாரி கழிவுநீரை அகற்றி, முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.