அரியலூர் அண்ணா நகர் பகுதியில் சாலையோரம் உள்ள வாய்க்காலில் குப்பைகள் அதிகளவில் குவிந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடப்பதோடு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இந்த குப்பைகளை பன்றிகளும், தெருநாய்களும் கிளறி வருவதால் அந்த குப்பைகள் சாலைகளில் பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.