சென்னை ராயபுரம் நாகாத்து அம்மன்கோவில் சந்து பகுதியில் அடிக்கடி கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் சாலை முழுவதும் கொடிக்கடி அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் அதிக குழந்தைகள், முதியவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.