சென்னை தண்டையார்பேட்டை, வைத்தியன் சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்து இருந்தது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சேதடைந்த கழிவுநீர் கால்வாய் மூடியை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.