புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் வழிந்தோட வழியின்றி கழிவுநீா் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் அங்கு வடிகால் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.